My Work /எனது பணிகள்

Home   /   About

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பொதுமக்களை கொரொனோ பாதிப்பில் இருந்து பாதுகாக்கவும், மருத்துவ கருவிகள் வாங்குவதற்கும் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து முதன் முதலாக நாமக்கல் மாவட்ட நிர்வாகத்திடம் ரூ. 1.20 கோடி( 1,20.00.000) நிதியை வழங்கிகொரோனவின் தாக்கத்தால் இருந்து மக்களை காக்கும் பணியில் எந்த வித விளம்பரமும் இல்லாமல் நமது பாரளுமன்ற உறுப்பினர் A.K.P. சின்ராஜ் அவர்கள் செயலாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான மருத்துவம் மற்றும் பராமரிப்புகள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் A.K.P. சின்ராஜ் அரசு மருத்துவமனைக்கு பலமுறை தொடர்ந்து சென்று ஆய்வு செய்து ஏழை, எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க அரும்பாடுபட்டு வருகின்றார்.
நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு ஏழ, எளிய மக்களின் சுகாதார பாதுகாப்பிற்காக புதியதாக இரண்டு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக ரூபாய் 75,000௦௦/- வழங்கியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்திற்கு அரசு மருத்துவகல்லூரி வேண்டுமென நாடாளுமன்ற உறுபினராக பதவியேற்ற பிறகு முதன் முதலாக ஜூன் மாதம் மாண்புமிகு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தார்.மேலும் செப்டம்பர் மாதம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை சந்தித்து நாமக்கல் மாவட்டத்திற்கு அரசு மருத்துவ கல்லூரி வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பேசி மருத்துவ கல்லூரியை பெற்றுத்தந்தால் அதற்காக இடம் நாங்கள் தருகிறோம் என்று எம்.பியிடம் மேடையிலே கூறினார். நவம்பர் மாதம் மத்திய அரசிடம் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு அரசு மருத்துவ கல்லூரி ஒதுக்கபட்டதற்க்கான ஆணை தமிழக அரசுக்கு கிடைத்தது. அதன்பின் மிக பிரமாண்டமான துவக்க விழா கண்டும், நாள் தநாமக்கலில் நடைபெற்ற சட்ட கல்லூரி திறப்பு விழாவில் அமைச்சர் பி. தங்கமணி பேசிய போது பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில்ோறும் தரமான கட்டிட பணிகளை மேற்பார்வையிடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.
நமது நாமக்கல் பாரளுமன்ற தொகுதிக்காக அருகில் உள்ள சேலம் விமான நிலையத்தை விரிவுபடுத்தும் நோக்கில் சேலம் விமான நிலையத்தில் இருந்து மதுரை, சென்னை, கோவை, திருச்சி, பெங்களுரு, கொச்சின், மற்றும் கேரளா செல்வதற்கான விமான சேவையை தொடங்க வேண்டும் என மாண்புமிகு சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் மாண்புமிகு ஹர்தீப் சிங் பூரி அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்து அதை நிறைவேற்றும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
கொக்காராயன்பேட்டை மற்றும் லக்காபுரம் இடையே GATE NO LCNO பரிசல்துரை என்ற பகுதியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தார் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் AKP . சின்ராஜ் அவர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு புதிய மேம்பாலம் அமைக்க மத்திய அரசு 50% சதவீத நிதியம் மாநில அரசு 50% சதவீத நிதியும் வழங்குவதாக கூறியுள்ளார். தற்போது புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
கோழிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதல்கள் பற்றி முழுமையாக கண்டறிவதக்கும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய முட்டை மற்றும் கோழி இறைச்சியின் தரச் சான்றிதழ் பெறுவதற்கான ஆய்வகம் தற்பொழுது போபாலில் மட்டுமே உள்ளது. இதனால் ஒவ்வொரு முறையும் நாமக்கல் மற்றும் ஈரோடு சுற்றியுள்ள் கோழிபண்ணையாளர்கள் தரச்சான்று பெற குறைந்த பட்சம் 15 நாட்கள் ஆகிறது. இதனால் பால்வள மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் மாண்புமிகு கிரிராஜ் சிங் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார் நமது எம்.பி அவர்கள், உடனே நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த ஆய்வகம் அமைக்க அமைச்சர் மாண்புமிகு கிரிராஜ் சிங் அவர்கள் உத்தரவுவிட்டுள்ளார்.
கரூர் – ஈரோடு – சேலம் வழியாக மும்பை சென்ற இரண்டு ரயில்களை நாமக்கல், ராசிபுரம் வழியாக செல்வதற்காக மதிய ரயில்வேத்துறை அமைச்சர் மாண்புமிகு. பியுஷ் கோயல் அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தார் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் AKP . சின்ராஜ் அவர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய ரயில்வே துறை டிசம்பர் 2ம் தேதி முதல் கரூர் – ஈரோடு – சேலம் வழியாக மும்பை சென்ற இரண்டு ரயில்களை நாமக்கல், ராசிபுரம் வழியாக செல்வ மாற்றம் செய்யபட்டது.
சேலம் உருக்காலைக்காக நிலம் கையகபடுதபட்ட போது அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மாற்று ஏற்பாடாக இடங்கணசாலையில் இடம் ஒதுக்கப்பட்டது. இப்பகுதி மக்கள் 3,4,5 வது வார்டுகளில் தாமாகவே வீடுகள் கட்டி கடந்த 45 வருடங்களாக குடியிருந்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் பயன்பாட்டிற்காக இருபது வருடங்களுக்கு முன்பாகஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்கத் தொட்டி கடந்த ஆண்டு இடிந்து விழும் நிலையில் இருந்த காரணத்தால் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் இடிக்கப்பட்டது. இதனால் அங்கு குடிநீர் நிறுத்தப்பட்டது. இதனால் நமது நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் அப்பகுதியில் நீர் தேக்க தொட்டி இருந்த இடத்தில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி அமைக்குமாறு 14.10.2019 அன்று சேலம் உருக்காலையில் நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் தனேஜா அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்து ரூ. 44 லட்சம் நிதியுதவி பெற்று 3 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தேவையை போர்கால அடிப்படையில் செய்து கொடுத்த பெருமைக்குரியவர் நமது எம்.பி.
புதுச்சத்திரம், ராசிபுரம், வெண்ணந்தூர், எருமப்பட்டி, மோகனூர், மல்லசமுத்திரம், மற்றும் நாமக்கல் வட்டங்களில் அதிக அளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பெய்த கன மழையைத் தொடர்ந்து நிலவும் வெங்காய பயிருக்கு சாதகமற்ற சூழலால் நோய் தாக்குதல் ஏற்பட்டு விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் நமது உறுப்பினர் நேரில் பார்வையிட்டு சென்னை, தோட்டகலை துறை கூடுதல் இயக்குனர் கண்ணன், தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக மூத்த விஞ்ஞானிகள் சண்முகம், தெய்வமணி, ஸ்ரீவித்யா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். கள ஆய்வில் தற்போது வெங்காய பயிரில் பரவி வரும்இந்நோயை கட்டுபடுட்ட ட்ரைகோடெர்மா, விரிடி, சூடோமோனஸ் ,ப்லோரோசன்ஸ் போன்ற உயிர் கொல்லிகள் மற்றும் ரசாயன கொல்லிகள் பற்றி ஆலோசனை வழங்கப்பட்டது.
கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த காரணத்தால் தமிழகதிற்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிலுவை தொகை 2017-2018 ஆண்டிற்கு ரூபாய் 194.78 கோடியும் 2018-2019 ஆண்டிற்கு ரூபாய் 2369.86 கோடியும் நிலுவையில் இருந்தது. இது தொடர்பாக நமது உறுப்பினர் அவர்கள் பிப்ரவரி மாதம் பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊராக வளர்ச்சி துறை அமிசேர் மாண்புமிகு நரேந்திர சிங் தோமர் அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்து தமிழகதிற்கு வரவேண்டிய ரூபாய் .2564.64 கோடியை பெற்றுத்தந்துள்ளார்.
மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை நமது நாடாளுமன்ற உறுப்பினரும் கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவருமான திரு. A.K.P. சின்ராஜ் அவர்கள் சந்தித்து நமது கோழிபண்ணையாளர்களுக்கு தேவையான மக்காச்சோளத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொண்டு வர ஏற்கனவே மனு கொடுத்திருந்தார். அதற்கு திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் வெளிநாடுகளிலிருந்து சதவீத இறக்குமதி வரியுடன் 4 லட்சம் டன்கள் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய காரணமாக இருந்த திருமதி. நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் அவர்களுக்கும் மத்திய கால்நடை துறை அமைச்சர் திரு. கிரிராஜ் சிங் அவர்களுக்கும் தெலுங்கான எம்.பி திரு. ரஞ்சித் ரெட்டி அவர்களுக்கும் அனைத்து கோழிப்பண்ணையாளர்கள் சங்க சார்பாக திரு. A.K.P. சின்ராஜ் அவர்கள் நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.